நுரையீரலை காக்க உதவும் எளிய மூலிகை வகைகள்..!!

நுரையீரலை காக்க உதவும் எளிய மூலிகை வகைகள்..!!



Natural herbs for Lungs

துளசி: துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன. இது நுரையீரலில் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, சளி தேக்கத்தையும் தடுக்கும்.

அதிமதுரம்: அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கி, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி இருந்தால் குணமாகும்.

மிளகுதூள்: மிளகில் வைட்டமின் சி. ப்ளேவனாய்டு, ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம்.

ஏலக்காய்: ஏலக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. குறிப்பாக சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை சரி செய்யக்கூடியவை.