இந்தியா

மும்பையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணிகளுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக மீண்டும் தரையிறக்கப்பட்டது

Summary:

mumai vimanam - payanikalukku - reththakayam

மும்பையில் இருந்து  ஜெய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகளும் அவசரமாக விமானத்திலிருந்து  இறக்கப்பட்டனர்.  இதனால் விமான நிலையத்தில் திடீர்  பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் புறப்படும் போது கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் ஸ்விட்ஸை  விமான பணியாளர்கள் ஆன் செய்ய மறந்து  விட்டதால்  அதிக அழுத்தத்தின் காரணமாக அதில் பயணம் செய்த 166 பயணிகளில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு  காது,  மூக்கு போன்ற உறுப்புகளில் ரத்தம் வந்தது.  சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.  இதனால் அவர்கள் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.  விமானத்தினுள் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின்  உடல்நலக் குறைவுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.


Advertisement