மருத்துவ பரிசோதனைகளுக்கு கட்டுப்பாடு; பாயும் புதிய சட்டம் இனியாவது குறையுமா குற்றம்?

மருத்துவ பரிசோதனைகளுக்கு கட்டுப்பாடு; பாயும் புதிய சட்டம் இனியாவது குறையுமா குற்றம்?



medical-test-in-new-rule---tamilnadu-gvt---announced

இன்றைய நவீன கால சூழலில் எந்த அளவிற்கு வசதிகளும் வாய்ப்புகளும் பெருகிவிட்டதோ அதே அளவிற்கு மக்களுக்கு நோய்களும் அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் மருத்துவமனைகளில் மக்களின் கூட்டங்கள் அலைமோதுகிறது.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்கள் மக்களிடம் பரிசோதனை என்ற பெயரில் தேவையில்லாத பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று கூறி அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

treatment

இது ஒருபுறமிருக்க மருத்துவ பரிசோதனை கூடங்கள் மூலமாகவும் மருத்துவர்கள் கமிஷன் தொகை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பலர் இக்காரணங்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் பெருகிவரும் குற்றங்களை தடுக்க மருத்துவரின் ஆலோசனையின் படி அவசியமானால் மட்டும் பரிசோதனை செய்து கொள்ளவும் மேலும், 45 நாட்களுக்கு பொதுமக்களிடம் கருத்துகள் கேட்ட பிறகு புதிய திருத்தங்களுடன் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.