உடலுக்கு பல நன்மைகளை வாரிவழங்கும் சுவையான கொண்டைக்கடலை முட்டை பொரியல்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!



kondaikadalai muttai poriyal

உடலுக்கு பல நன்மைகளை வாரிவழங்கும் கொண்டைக்கடலை முட்டை பொரியல் எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

கொண்டைக்கடலையில் அதிகளவு புரோட்டீன் சத்து இருக்கிறது. மேலும் வளரும் குழந்தைகளுக்கு பல சத்துகளையும் வாரிவழங்குகிறது.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - ஒன்று 
பச்சை மிளகாய் - 3 
முட்டை - 3
கருப்பு கொண்டைகடலை - 100 கிராம் 
மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி 
ஆலிவ் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கு ஏற்ப 
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :

★முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★கொண்டைக்கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேகவைக்க வேண்டும்.

★பின் வானலியில் தேவையான எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

★வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

★அடுத்து முட்டை உதிரியாக வந்தபின் கொண்டகடலையை சேர்த்து மிதமான தீயில் சிறிதுநேரம் வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் கொண்டைக்கடலை முட்டை பொரியல் தயாராகிவிடும்.