ஆளி விதையை இப்படி சாப்பிட்டு வந்தால்... ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்...!



If you eat flax seeds like this... Lose weight easily...!

ஆளி விதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆளி விதையை, மிதமான சூட்டில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். முளைகட்டியும் சாப்பிடலாம். முளைகட்டிய ஆளி விதையில் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.

ஆளி விதையை இரவில் ஊற வைத்து காலையில் அவித்து சாப்பிடுவதால் இதய நோய் வராமல் பாதுகாக்கும். மூளையின் சக்தியை அதிகரிக்கும். மேலும் ஆளிவிதை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராமல் தடுக்கும்.

தினமும் ஆளி விதை சாப்பிட்டு வர, சிறுநீரக பிரச்சனையை சீராக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

ஆளி விதையை சாப்பிட்ட பிறகு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் இல்லை என்றால் மலச்சிக்கல் மற்றும் வாய்வு தொல்லையை உண்டாக்கும்.

மேலும் ஆளி விதை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையை ஒழுங்குபடுத்தும் முடி கொட்டுவதை குறைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள் வராமல் தடுக்கும்.

100 கிராம் ஆளி விதையில், 28 கிராம் நார்ச்சத்து, 530 கிராம் கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 20 கிராம் புரதம் ஆகியவை நிறைந்துள்ளன. லக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா 3 என்ற நல்ல கொழுப்பு ஆகிய உயிராற்றலை சுறுசுறுப்பாக்கும் சத்துகளும் ஆளி விதையில் உள்ளன.

ஆளி விதையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து, காத்து புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு துண்டு இஞ்சி இடித்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஆளி விதையின் பவுடர் சேர்த்து, நன்றாக கலந்து தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகு, அரை மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். ஆரோக்கியம் மேம்படும்.