பலரையும் வாட்டி வதைக்கும் வயிற்றுப்புண்.! இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி.?

பலரையும் வாட்டி வதைக்கும் வயிற்றுப்புண்.! இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி.?


How to treat stomach ulcers

தற்போதைய சூழலில் பலர், அதிக சுவை உள்ள உணவை உண்ணவேண்டும் என்பதற்காக இயற்கை உணவையே மறந்து விடுகின்றனர். முந்தய காலத்தில் முன்னோர்கள் சுவையான உணவிற்காக குறைந்தபட்சம் வாரத்தில் இரு முறையாவது வீட்டில் கீரை சமைப்பார்கள்.  முந்தய காலத்தில் கலப்பின மரம், செடி, விலங்குகள் எல்லாம் கிடையாது. ஆனால் தற்போது நாட்டு கீரை, நாட்டு காய்கறிகள், நாட்டு பசும்பால் என தேடிச்சென்று வாங்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. 

அனைத்திலும் கலப்பினம் வந்ததால் தான் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் மனிதர்களுக்கு வருவதற்கு ஒரு காரணமாகிவிட்டது. வயிற்றுப்புண்ணுக்கு, உணவுக்கட்டுப்பாடு, நாட்டு வைத்தியம், சித்தவைத்தியமே சிறந்தது என கூறுகின்றனர் நாட்டு வைத்திய சிகிச்சையாளர்கள். தற்போது வயிறுவலி என்று மருத்துவமனை சென்றாலே எண்டோஸ்கோபி எடுக்க வேண்டும் என கூறுவார்கள். எண்டோஸ்க்கோப்பி என்பது காலையில் இருந்தே எதுவும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் எடுப்பார்கள். மணத்தக்காளி , திராபலா சூர்ணம், குளிச்சியான உணவுகள் பழங்கள் சாப்பிட்டவுடன் படுக்காமல் இருத்தல் இதுபோன்று நாம் அல்சரை புண்ணை கட்டுப்படுத்தலாம்.

ulcer

மணத்தக்காளி கீரை சூப் செய்து காலை சாப்பாட்டுக்குமுன்குடிக்கலாம்.  சாப்பாட்டில்  அகத்தி கீரை, ‌‌முட்டைகோஸ்,  ‌மணத்தக்காளிகீரை.  பாசிப்பருப்பு தேங்காய்  எல்லாம் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். காலை வெறும் வயிற்றில் சோற்றுகற்றாலை சாப்பிட்டால் வயிற்றுப்புண் சரியாகிவிடும் 

 இரவு சாப்பாட்டில் தேங்காய்பால்‌ சேர்த்துகொள்ளவேண்டும். காலை  மதியம்  நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவேண்டும். ‌‌இளநீர், நுங்கு சாப்பிடலாம். வயிற்றுப்புண் ஆறும் வரை காரமான உணவு சாப்பிடாதீர்கள். புண் ஆறிய பிறகு மிதமான காரம் சாப்பிடுங்கள். புளிக்காததயிர்சாப்பிடுவது நல்லது.  காஃபி டீ‌குறைத்துக்கொண்டால் நல்லது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காலையில்  தினமும் மாதுளை சாப்பிட்டால் நல்லது. இதனை பலருக்கும் பகிர்ந்து பயனடைய செய்வோம்.