பெண்கள் மட்டும்.. அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?.!

பெண்கள் மட்டும்.. அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?.!



how-to-make-good-vaginal-area-and-private-parts-of-woma

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக பேசாமல் தவிர்ப்பது, அந்த அலட்சியத்தால் உடல்நலம் சார்ந்த ஆரோக்கியம் பாதிக்கப்படுவது நடைபெறுகிறது. ஆண்களை விட பெண்கள் அந்தரங்க பகுதிகளின் சுத்தத்தில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் தேவையான ஒன்றாகும். 

அழகு வெளிப்புற தோற்றம் சார்ந்தது மட்டுமல்ல. உடலின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமும் கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பு மீது கவனம் செலுத்தி, அதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 

உள்ளாடை: 

இன்றுள்ள நிலையில் தினமும் பெண்கள் உள்ளாடைகள் அணிவது தவிர்க்க இயலாததாக உள்ளது. மாதவிடாய் நாட்களிலும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், அன்று தங்களின் வலியையும் தாங்கிக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். உள்ளாடையை பொறுத்த வரையில் அது ஈரப்பதத்தோடு இல்லாமல், உலர்வானதாக இருக்க வேண்டும்.

health tips

இறுக்கமாக உள்ளாடை அணியாமல், தளர்வுடன் இருக்க விடும். பருத்தியினால் தயார் செய்யப்பட்ட உள்ளாடை நல்லது. அதனைப்போல, சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீரால் பிறப்புறுப்பை சுத்தம் செய்து, துணியால் துடைக்க வேண்டும். இதனால் நோய்க்கிருமி பரவாமல் தடுக்கலாம். பிறப்புறுப்பு பகுதிகளுக்கு முகத்திற்கு உபயோகம் செய்யப்படும் பவுடர் மற்றும் கிரீம் போன்றவற்றை கட்டாயம் உபயோகப்படுத்த கூடாது.  

நாப்கின்: 

மாதவிடாய் நாட்களில் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி குறைந்தது 4 மணிநேரம் முதல் 6 மணிநேரத்திற்கு மேல் நாப்கினை மாற்ற வேண்டும். ஒரு நாப்கினை தொடர்ந்து உபயோகம் செய்தால், அது சரும அரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்தும். 

health tips

சோப்பு: 

பிறப்புறுப்பு என்பது மிருதுவான பகுதி ஆகும். இதில், வேதியியல் பொருட்கள் கொண்ட சோப்பு போன்றவற்றை உபயோகம் செய்யாமல் இருப்பது நல்லது. இளம் சூடுள்ள நீர் கொண்டு பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தம் செய்துகொள்ளலாம். 

மேலும், பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள உரோமத்தை நீக்கும் போது காயங்கள் ஏற்படலாம். இயன்றளவு பாதுகாப்பான முறையில் உரோமத்தை அகற்றலாம். பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றம் அல்லது பிரச்சனை குறித்து சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. காற்றோட்டமான உள்ளாடைகளை அணிந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.