மருத்துவம் லைப் ஸ்டைல்

21 நாள் தொடர்ந்து இந்த பழம் சாப்பிடுங்க! கிடைக்கும் அற்புத பலன்களை நீங்களே காண்பிங்க!

Summary:

Health benefits of vilampazham and tips

கிராமங்களில் பரவலாக கிடைக்கும் பழங்களில் ஒன்றும் விளாம்பழம். இதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. குறிப்பாக விளம்பலத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. இது பல் மற்றும் மனிதனின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

ஜீரணம் இல்லாமல் அவஸ்தபடுபவர்கள், சிறிதளவு சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் செய்து வர நன்கு ஜீரணமாகும். மேலும் நல்ல பசியையும் தூண்டுகிறது.

மனிதனின் பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது சரியான அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதுதான். விளாம்பழம் சாப்பிடுவதன் மூலம் தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படுகிறது. மேலும் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

வாய்ப்புண், அல்சர் உள்ளவர்கள் விளாம்பழத்தை தயிருடன் சேர்ந்து சாப்பிட்டால் இவை அனைத்தும் விரைவில் சரியாகும். மேலும் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் விளாம்பழத்தை வெல்லத்தில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி பிரச்னை நீங்கிவிடும்.

வாயு தொல்லை உள்ளவர்கள் விளாமரத்தின் இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதை தினமும் குடித்துவர வாயு தொல்லை நீங்கிவிடும். தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும். 

இவை அனைத்தும் பைசா செலவின்றி இயற்கை நமக்கு அழித்த மாபெரும் கொடை. இதை அதிகம் ஷேர் செய்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்.


Advertisement