சாப்பிடும் போது ஒதுக்கி வைக்கும் கருவேப்பிலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?



health-benefits-of-curry-leafs

சமையலில் மிக முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுவது கறிவேப்பிலை. பலரும் இதனை நறுமணத்திற்காக பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால்,  கருவேப்பிலையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.

எனவே கருவேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினம் கருவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

Curry leafs

அதேபோல், காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அழகான உடலை பெறலாம்.

ரத்த சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், கருவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை குணமாகும்.

Curry leafs

கருவேப்பிலை இலை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது.

குறிப்பாக கருவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வருவதால் தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல பலன் கொடுக்கிறது. மேலும் முடி கருமையாக வளரவும் உதவுகிறது.