வாவ்... புற்று நோய்க்கு புதிய தடுப்பூசியை கண்டறிந்த பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்.! விரைவில் வெளியாக இருக்கும் LUNGWAX தடுப்பூசி.!

வாவ்... புற்று நோய்க்கு புதிய தடுப்பூசியை கண்டறிந்த பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்.! விரைவில் வெளியாக இருக்கும் LUNGWAX தடுப்பூசி.!



british-scientists-developing-lung-cancer-vaccine

உலகின் அதிகப்படியான மக்களின் உயிர்களை காவு வாங்கும் நோய்களில் முதன்மையான ஒன்றாக இருப்பது புற்றுநோய். இந்தப் புற்றுநோய் அபாயத்திலிருந்து மக்களை காப்பதற்கு மருத்துவ உலகம் தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணியில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோய் வகைகளில் நுரையீரல் புற்றுநோய் அதிகப்படியான மக்களை தாக்கி உயிர்ப்பலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த புற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் பணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

Lung CancerLungwax என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை கண்டறிந்து அழிக்கக்கூடிய வல்லமை பெற்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புற்றுநோய் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகளுக்கு 1.7 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்( இந்திய மதிப்பில் 17 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நுரையீரல் புற்று நோய்க்கான முதல் தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Lung Cancerகொரோனா தொற்று நோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தொழில்நுட்பத்தை போன்றே இந்தப் புற்றுநோய் தடுப்பூசியும் உருவாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியானது முதலில் 3,000 டோஸ்கள் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவிலேயே இந்த தடுப்பூசி காண மருத்துவ சோதனைகளும் நடத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.