நினைவாற்றலை மேம்படுத்த, மலச்சிக்கலை தடுக்க இன்றே கருப்பு திராட்சை சாப்பிடுங்கள்..! இவ்வளவு நன்மைகள் உள்ளதா?..!!
நினைவாற்றலை மேம்படுத்த, மலச்சிக்கலை தடுக்க இன்றே கருப்பு திராட்சை சாப்பிடுங்கள்..! இவ்வளவு நன்மைகள் உள்ளதா?..!!

உன்ன தகுந்த பழங்கள் அனைத்தும் உடலுக்கு நன்மை சேர்ப்பவையே. அவற்றின் அளவு எப்போதும் முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கருப்பு திராட்சையில் மருத்துவ குணங்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இதனை ஜாம், ஜுஸ், ஒயின் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
கருப்பு திராட்சை நமது செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படுகிறது. பசி உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை காற்று மாசிலிருந்து பாதுகாக்கிறது.
நினைவாற்றலை மேம்படுத்தி முதுமையில் அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்க உதவி செய்கிறது. நமது இதய பாதிப்பை குறைத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. அதேபோல தொற்று நோய் ஏற்படுவதையும் குறைத்து உடலில் இருக்கும் வீக்கங்களை குறைக்கவும் உதவி செய்கிறது.