தினம் 2 செம்பருத்திப்பூ போதும்.. உடல்நல பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு.!

தினம் 2 செம்பருத்திப்பூ போதும்.. உடல்நல பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு.!


benefits-of-semparuthi-poo-hibiscus-flower-tamil

அழகாக இருக்கும் செம்பருத்திப்பூ இயற்கையாகவே பல நன்மைகளை தரவல்லது. இதில் இருக்கும் மருத்துவ குணம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செம்பருத்தி பூவில் உள்ள ஆண்டி ஆக்கிசிடண்ட், ஆன்தோசயனின், ப்ளோவனாயிடு போன்றவை இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவி செய்கிறது.

இந்தியாவில் அதிகளவில் காணப்படும் மருத்துவ மலர்களில் ஒன்றாக உள்ள செம்பருத்திப்பூவினை தேநீராகவும் குடித்து வரலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவி செய்கிறது. 

benefits

செம்பருத்திப்பூவின் மூலமாக தயாரிக்கப்படும் தேநீரை 12 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிஸ்டோலிக் என்ற இரத்த அழுத்தம் 11.2 % குறையும். டயஸ்டோலிக் இரத்த அழுத்தம் 10.7 % குறைவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செம்பருத்திப்பூ தேநீரை குடிக்கலாம். 

உயர் இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்களின் நரம்புகள், கண்கள், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படும். இதனால் இதய நோயும் ஏற்படலாம். செம்பருத்திப்பூ சாறினை 21 நாட்கள் தொடர்ந்து குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறையும். 

benefits

இரத்த குழாய்களில் இருக்கும் கேடு விளைவிக்கும் கொழுப்பு காரணமாக இதய நோய்கள் அதிகரிக்கிறது. செம்பருத்திப்பூ சாறினை பிழிந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள கேடான கொலஸ்ட்ரால் 22 % குறையும். மேலும், நல்ல கொலஸ்டரோல் அளவும் அதிகரிக்கப்படும். 

செம்பருத்திப்பூவின் இலைகளை வைத்து தயார் செய்யப்படும் அந்தக்கால பாட்டி கைப்பக்குவ பேஸ்ட், எண்ணெய் போன்றவை கூந்தலின் வளர்ச்சியை அதிகரித்து. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும். 

benefits

செம்பருத்தி இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. செம்பருத்திப்பூ சாறில் உள்ள மருத்துவ குணம், மனித செல்களில் இருக்கும் டி, பி செல்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரும புற்றுநோயையும் தடுக்கும். இரத்தத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கிறது.