கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
அட்ராசக்க.. மாரடைப்பு, இதயநோய் வராமல் தடுக்க அருமையான டிப்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
மாரடைப்பு மற்றும் இதயநோய் வராமல் தடுக்கும் ப்ராக்கோலியில் உள்ள நன்மைகள் குறித்து காணலாம்.
ப்ராக்கோலி ஒரு குளிர்காலப்பயிர். இது குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரிடப்படுவதால் எண்ணற்ற சத்துபொருட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய்க்கு எதிராக சிறந்த மருந்தாக விளங்குகிறது. இரண்டு முதல் மூன்று கப் ப்ராக்கோலி வீதம் வாரத்திற்கு உணவில் சேர்த்து வருவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலும்.
மேலும் புற்றுநோய் கிருமிகளையும் வளரவிடாமல் தடுக்கலாம். அதுபோல ப்ராக்கோலியில் உள்ள பி காம்ப்ளக்சும், வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் இதயநோயிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது. உடனடி மாரடைப்பும் வராமல் தடுக்கிறது.
தைராய்டு நோய்க்கும் பிராக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும். இதனை பச்சையாக உண்பதால் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர இயலும். கண்விழிகளும் பாதுகாப்பாக இருக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள ப்ராக்கோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் வல்லமையும் உள்ளது.