டீலுக்கு ரூ.15 லட்சம்.... என்கிட்ட ரகசிய போன் கால் ஆடியோ இருக்கு! அழகான பொம்மை... இது ஆபத்தான பொம்மை! திமுக-வை வெளுத்தெடுத்த தவெக கனிமொழி...!!!



kovai-kanimozhi-santhosh-dmk-15-lakh-claim

கோவை கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகி கனிமொழி சந்தோஷ் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என ஜோதிட ரீதியாக யூடியூப்பில் பேசுவதற்கு தன்னிடம் ரூ.15 லட்சம் வழங்குவதாக சிலர் பேசியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான உரையாடல் பதிவுகள் மற்றும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரூ.15 லட்சம் பேக்கேஜ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு

கூட்டத்தில் பேசிய கனிமொழி சந்தோஷ், கரூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் தன்னை அணுகி இதுபற்றி பேசியதாகக் கூறினார். ரூ.15 லட்சம் பேக்கேஜ் வழங்குவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், தேர்தல் தொடர்பான இந்த பேச்சுவார்த்தைக்கு உரிய செல்போன் உரையாடல் பதிவுகள் தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கட்டுக்கட்டாக களையும் அதிமுக கோட்டை! அடுத்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் தாவ தயார்? இனி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை... செங்கோட்டையனின் பரபரப்பு பேட்டி...!!!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிடம் தொடர்பாக பேசியபோது தனக்கு கோபம் ஏற்பட்டதாகவும் கனிமொழி சந்தோஷ் கூறினார். அப்போது வெளிப்படுத்த நினைத்த தகவலை தற்போது பொதுவெளியில் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

‘அழகான பொம்மை... ஆபத்தான பொம்மை’

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றியும் தனது செயல்பாடுகள் குறித்தும் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். தன்னை அழகான பொம்மை என்று சிலர் விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த பொம்மை ஆபத்தான பொம்மையாகவும் இருக்கலாம் என்று கூறினார். விமர்சிப்பவர்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுமாறும் சவால் விடுத்தார்.

மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவதாகவும், தன்னிடம் 26 கார்கள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு ஆதாரம் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சட்டமன்ற உறுப்பினர் என்றால் எளிமையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

2031 தேர்தலை நோக்கி தவெக பயணம்?

தவெக-வின் அரசியல் பயணம் 2031 தேர்தலை நோக்கியதாக இருக்கும் எனத் தெரிவித்த கனிமொழி சந்தோஷ், எதிர்காலத்தில் தமிழக அரசியலில் இரு துருவப் போட்டி என்ற நிலை இருக்காது என்றும் கூறினார். தமிழக வெற்றி கழகம் மட்டுமே முக்கிய அரசியல் சக்தியாக உருவெடையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல், கவுண்டம்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பட்டா தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் கனிமொழி சந்தோஷ் உறுதியளித்தார்.

 

இதையும் படிங்க: BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?.... பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெக- வின் தரமான சம்பவம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்....!!!