அச்சச்சோ.. இஞ்சி டீயை விரும்பி குடிக்கிறீங்களா?.. எச்சரிக்கை பதிவு உங்களுக்குதான்.. ஆரோக்கியம் பாதிக்கும் அபாயம்..!!

அச்சச்சோ.. இஞ்சி டீயை விரும்பி குடிக்கிறீங்களா?.. எச்சரிக்கை பதிவு உங்களுக்குதான்.. ஆரோக்கியம் பாதிக்கும் அபாயம்..!!



benefits-and-problems-of-ginger-tea

நாம் இன்றளவில் டீ குடித்து பழகிப்போய்விட்டோம். அதில் நன்மைகளும், தீமைகளும் இருக்கின்றன. எதையும் அளவோடு எடுத்துக் கொள்வது அனைவரின் உடலுக்கும் நல்லது. சுறுசுறுப்பாக இருக்க காலை எழுந்ததும் தேநீர் குடிக்கப்படுகிறது.

இவற்றில் இஞ்சி டீ பெரும்பாலும் கடைகளில் குளிர்காலங்களில் விற்பனையாகிறது. கோடைகாலத்திலும் ஒரு சிலர் அதனை வாங்கி குடிப்பர். இந்த நிலையில் இஞ்சி டீ அதிகமாக குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Ginger Tea

குளிர்காலத்தில் நன்மையை தரும் இஞ்சி டீ மூலமாக செரிமான மண்டலம்  வலுவடைந்து ஜீரண சக்தி நன்றாக இருக்கும். அதே நேரத்தில் அது உடலின் வெப்பத்தை அதிகரிக்க கூடும் என்பதால் கோடைகாலங்களில் குடிப்பது நல்லதல்ல. 

அதே போல இஞ்சி டீ உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும் கொண்டது. இதனால் சர்க்கரை நோயாளிகள் இஞ்சி டீ தயங்காமல் அருளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக அதனை குடிப்பது நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைக்கும் வழிவகை செய்யும்.