குளியல் சோப்பு வாங்குவதில் இவ்வுளவு விஷயம் உள்ளதா?.. தெரிஞ்சுக்கோங்க மக்களே..!

குளியல் சோப்பு வாங்குவதில் இவ்வுளவு விஷயம் உள்ளதா?.. தெரிஞ்சுக்கோங்க மக்களே..!


Bating Soap Selection Tamil Tips

மாதாமாதம் வீடுகளில் வாங்கப்படும் பொருட்களின் பட்டியலில் குளியல் சோப் தவிர்க்க இயலாத இடத்தினை பிடித்துவிட்டது. தினமும் சோப் இல்லாமல் குளிப்பவர்களை இன்றளவில் விரல் விட்டு எண்ணிவிடலாம். சோப்பை பயன்படுத்தினால் மட்டுமே சருமம் பொலிவு பெரும் என்ற எண்ணமும் நம்மிடையே இருக்கிறது. சிலர் சோப்பால் தான் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலில் நல்ல மனம் ஏற்படுகிறது என்று இருக்கிறார்கள். அவ்வாறு வீசும் மனதுக்கும், உருவாகும் நுரைக்கும் பின்னனியில் உள்ள ரகசியம் யாருக்கும் தெரியாது. அதனை இன்று தெரிந்துகொள்ளலாம்.

சோப்புகள் மூலப்பொருள் உப்பு ஆகும். இதில், காரத்தன்மை கொண்ட ஆல்கலைன் மற்றும் தாவர கொழுப்பு போன்றவற்றை சரியான விகிதத்தில் சேர்த்தால் குளியல் சோப்பு உருவாகிறது. மேலும், நிறத்திற்காக சில பொருட்களும், வாசனைக்காக சில பொருள்களும் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. நுரைக்காக இரசாயனம் கலக்கப்படுகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் சோப்பில் சருமத்திற்கு ஏற்ற காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை போன்றவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கார, அமிலத்தன்மை 5.5 க்கு மேல் சென்றால் சரும வறட்சி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். 

எண்ணெய் பசையாக இருக்கும் சருமத்துக்கு வேப்பிலை, எலுமிச்சை சேர்க்கப்பட்ட சோப்பு நல்லது. வறண்ட சருமத்திற்கு கோகோ பட்டர், வெஜிடபிள் ஆயில், கற்றாழை, ஜோஜோபா எண்ணெய், வைட்டமின், அவகேடா போன்றவையால் தயாரிப்பட்ட சோப் நல்லது. சோப்பின் கவர்ச்சியான வசீகரிக்கும் நிறமும் ரசாயனத்தால் அமைகிறது என்பதை மறக்க வேண்டாம். 75 % டி.எப்.எம் கொண்ட சோப் முதல் தர சோப் ஆகும். 65 % முதல் 75 % டி.எப்.எம் சோப் நடுத்தரமானது ஆகும். சோப் வாங்கும் போது டி.எப்.எம் அளவினையும் பார்க்க வேண்டும். 

bating

வீரியம் கொண்ட ரசாயனமான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சிந்தடிக் ப்ராக்ரன்ஸ் போன்றவையால் தயார் செய்யப்பட்ட சோப்புகள் குளியலுக்கு உபயோகம் செய்ய கூடாது. பெரியவர்கள் கூட சில நேரங்களில் பேபி சோப் உபயோகம் செய்வார்கள். இதனை பெரியவர்கள் உபயோகம் செய்தால் உடலில் அழுக்குகள் தாங்கும். சரும துளைகள் குழந்தைகளுக்கு இருக்காது என்பதால், அவர்களுக்கு பிரச்சனை இல்லை. அவர்களே பெரியவர்களான பின்னர் உபயோகம் செய்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும். 

இன்றளவில் மூலிகை சோப் என்பவை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவர்களின் வியாபார யுக்தியாக மூலிகை என்ற பெயரை உபயோகம் செய்கின்றனர். அதிலும் இரசாயனங்கள் உள்ளது. சாதாரண சோப்பு ஒப்புக்கொள்ளாமல் சரும பிரச்சனைகள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. நறுமணத்தை வெறுமனே நம்பி சோப்பு வாங்கினால் இழப்பு தான் பரிசாக கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.