இவ்வளவு ஆபத்தா?.. பரோட்டா பிரியர்களே உஷார்.. உயிரே பறிபோகும் அபாயம்.!



Barotta eating side effects

 

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பாரம்பரிய ஆரோக்கியமான உணவுமுறை முழுவதுமாக மாறி ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் உள்ளிட்ட மற்ற நாடு உணவுகளின் மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக பின் நாட்களில் உடல் நலக்கோளாறு ஏற்படும் என அறிந்தும் ஆர்வத்தினால் ஷவர்மா, நூடுல்ஸ், பரோட்டா, ப்ரைட் ரைஸ், ராமன் மற்றும் பிற உணவுகளை உண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அச்சச்சோ.. வெயிலுக்கு குளுகுளு குளிர்பானங்களை குடிக்கிறீங்களா?.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை செய்தி.!!

health tips

சத்துக்கள் இல்லாத மைதா

இதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மக்கள் கவலைப்படுவதில்லை. சத்துக்கள் இல்லாத கலோரிகள் மட்டுமே இருக்கும் மைதாவில் இருந்து தயாரிக்கப்படும் பரோட்டா அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. 

பரோட்டாவால் இதயநோய்

சாதாரண பரோட்டாவில் இவ்வளவு பிரச்சனை என்றால் எண்ணெயில் பொரித்த பரோட்டா, இலையில் வேகவைத்த பரோட்டா, பன் பரோட்டா என மைதாவில் செய்யப்படும் இவற்றை சாப்பிடுவது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இதய நோய்களையும் உண்டாக்கும்.

health tips

யிரை பறிக்கும் மைதா

மைதா சேர்த்த உணவுகளை உண்பது விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஆசைக்கு எப்போதாவது மைதாவில் செய்த பரோட்டா உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாமே தவிர அடிக்கடி சாப்பிடுவது உயிரையே பறிக்கும்.

இதையும் படிங்க: பாக்கெட் மாவுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்; உஷாரா இருங்க மக்களே.!