பாராட்டு மழையில் கேரளா மருத்துவர்; அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?

பாராட்டு மழையில் கேரளா மருத்துவர்; அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?


Kerala dostor serves his people

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கேரளாவின் 12 மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் செய்திகள் தினமும் வந்தவண்ணம்  தான் உள்ளன.

இந்நிலையில் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்படும் நபர் கேரளாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர்.

அப்படி என்ன செய்துவிட்டார் அவர். தன் திருமண நாள் எப்போது வரும் என்று எண்ணி காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில், ஒரு மருத்துவர் இன்று நடைபெறவிருந்த தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

kerala flood

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மூன்று லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த கனமழை காரணமாக 19,512 கோடி சேதம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக 58 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்பு பணிகளையும் அவசர மருத்துவ உதவி அளிக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கேரளாவிற்கு பல மாநிலங்களிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அருண் என்பவரின் திருமணம் இன்று நடைபெறவிருந்தது. ஆனால் அவர் தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு, கேம்ப்பில் இருக்கும் மக்களுக்கு ஒரு மருத்துவராக உதவி செய்து வருகிறார்.

kerala flood

இவரின் இந்த செயலைக் கண்டு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.