டெக்னாலஜி

உலகம் அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதா? விஞ்ஞானிகள் ஆராய்ச்சி என்ன கூறுகிறது?

Summary:

விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் நாமக்கல்லை எப்போதும் புரியாத புதிராகவே உள்ளது. அப்படி ஒரு புதிரான விஷயத்தை புரிய வைக்க முயன்றுள்ளனர்.

நம்மைச் சுற்றியுள்ள பால்வெளி முன்னர் ஒரு தடவை அழிந்து மீண்டும் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது நமது பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களின் இரசாயனக் கட்டமைப்புக்களை ஆராய்ந்த பின்னர் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பால் வெளியின் பெரும்பிரிவில் நட்சத்திரங்கள் அவற்றின் இரசாயனக்கூறின் அடிப்படையில் இரு பெரும் குடித்தொகைகளாகப் பிரிக்கப்பட்லாம்.

முதல் குழுவில் ஆக்ஜிஸன், மக்னீசியம், சிலிக்கன், சல்பர், கல்சியம் மற்றும் டைட்டேனியம் என்பன அதிகம். இவை அல்பா மூலகங்கள் எனப்படுகின்றன.

இரண்டாவது குழுவில் அல்பா மூலகங்கள் குறைந்தளவில் காணப்படுகின்றன. இது இரும்பினை அதிகளவில் கொண்டுள்ளது.

இவ் இரு வேறுபட்ட தன்மைகள் அவற்றின் தோன்றல் நிலைகளில் ஏதோ நடந்துள்ளமையைக் காட்டுகின்றது. ஆனாலும் இதன் பின்னாலுள்ள முக்கிய பொறிமுறை தெளிவற்றதாகவே உள்ளது.

இது பற்றி Tohoku பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த Masafumi Noguchi, இவ்விரு குடித்தொகைகளும் இரு வேறு நட்சத்திரத் தோன்றல்களைக் காட்டுகின்றது என்கிறார். இதற்கிடையில் நட்சத்திரத் தோன்றல்கள் இன்றிய ஒரு உறங்குநிலைக் காலமும் இருந்திருக்கின்றது என்கின்றனர்.

இங்கு முதல் வகுப்பு நட்சத்திரங்கள் தோன்றி 10 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் சில நட்சத்திரங்கள் அழிந்து α elements அதிகமாயுள்ள புதிய வகை நட்சத்திரத் தொகுதியை உருவாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.


Advertisement