BREAKING : புயல் காரணமாக சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை அறிவிப்பு!



monda-cyclone-school-holiday-tamilnadu

தமிழகத்தில் பருவமழை வேகம் அதிகரித்துள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் தாக்கம் காரணமாக கல்வி துறையில் உடனடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மூன்று மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை

மோந்தா புயல் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கான நிலைமை மழை தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே செவ்வாய்க்கிழமை கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரவில் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்....

மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பை முன்னிட்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிலைமைக்கு ஏற்ப கூடுதல் அறிவிப்புகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: மொன்தா புயல் எதிரொலியால் கனமழை எச்சரிக்கை! இந்த 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? வெளியாகும் குட் நியூஸ்...