அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
அடப்பாவமே.. கணவரால் சீரியலிலிருந்து விலகும் சீதாராமன் தொடர் நடிகை.. அடுத்த சீதா இவர்தானா?.! ரசிகர்கள் ஷாக்.!!
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நாயகியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா. இவர் சன்டிவியில் ரோஜா சீரியல் மூலமாக அறிமுகமாகினார். சீதாராமன் தொடரில் இவர் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுவந்த நிலையில், தற்போது தொடரில் இருந்து அவர் விலகப்போவதாக செய்திகள் வெளியாகியது.

மேலும் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீதா கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படத்தோடு கடைசி சீதா மேக்கப் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவது உறுதியானது. பிரியங்காவிற்கும், ராகுல் என்பவருக்கும் கடந்த 2018 மே மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது.

இவர்களது நிச்சயதார்த்தம் நிறைவுபெற்று ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் திருமணம் நின்றுபோனதாக தகவல் வெளியாகின. ஆனால் கடந்த மாதம் ராகுல், பிரியங்காவின் திருமணம் கோவிலில் நடைபெற்ற நிலையில், கணவர் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் நடிப்பில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீதா கதாபாத்திரத்திற்கு பிரியங்காவுக்கு பதில் நடிகையாக ஸ்ரீ பிரியங்கா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சசிகுமாரின் இயக்கத்தில் வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.