சினிமா

யூத் பட நடிகையா இது? குழந்தையும் குட்டியுமா இப்போ எப்படி இருக்கார் பாருங்க! புகைப்படம்.

Summary:

Youth movie actress Shaheen Khan laetst photos

தளபதி விஜய்யின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் யூத். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சாஹீன் கான். யூத் படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்திருந்தாலும் அந்த படத்திற்கு பிறகு இவரை எந்த தமிழ் படங்களிலும் காண முடியவில்லை.

தமிழை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே இவருக்கு மாடலிங் துறையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தது. பிரபல முக அழகு க்ரீம் விளம்பரம் ஒன்றில் நடித்த இவருக்கு அதன்பின்னர்தான் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

சினிமாவில் பிரபலமாக இருந்த இவர் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மும்பையிலையே செட்டிலாகிவிட்ட இவர் அடுத்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

தற்போது தனது கணவர், குழந்தைகளுடன் வசித்துவருகிறார் சாஹீன் கான். யூத் படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காத இவரின் தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement