BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
2 முறை கரு கலைப்பு.!! "இப்போவே கல்யாணம் பண்ணு..." மிரட்டிய காதலி.!! எரித்து கொன்ற காதலன்.!!
திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த நபர் தனது காதலியை எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் காவல்துறையிடம் பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகேயுள்ள அமைதிச்சோலை என்ற பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

முதல் கட்ட விசாரணை
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இறந்த பெண் மதுரையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்தது. மேலும் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் திண்டுக்கல்லில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டு கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் மாரியம்மாள் 2 முறை கருக்கலைப்பு செய்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரவீனை காவல்துறை கைது செய்து விசாரித்ததில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சி அருகே பயங்கரம்... "உறங்கி கொண்டிருந்த விவசாயி எரித்து கொலை..." மர்ம நபருக்கு வலை வீச்சு.!!
குற்றவாளியின் வாக்குமூலம்
பிரவீனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் தனது காதலி மாரியமாளை எரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் மாரியம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கொலை செய்து விட்டு அவரது சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சென்னையில் பரபரப்பு... "செல்போனில் பெண்கள், சிறுமிகளின் ஆபாச படம்..." வட மாநில இளைஞர் கைது.!!