சினிமா

அடேங்கப்பா என்ன ஒரு ஆட்டம்.! நடிகர் கமல்ஹாசனையே வியக்க வைத்த டான்ஸ்! வைரல் வீடியோ!

Summary:

young man dance like kamalahasan


நடிகர் கமல்ஹாசன் அபூர்வ சகோதர்கள் படத்தில் மாற்றுத்திறனாளியாகவும், ஒரு மெக்கானிக்காகவும் நடித்து அந்த படம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தது. அபூர்வ சகோதர்கள் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் "அண்ணாத்தே ஆடுறார்" என்ற பாடலுக்கு கமல் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார்.

இந்நிலையில், அஷ்வின் குமார் என்பவர் கமல் ஆடிய அதே பாடலுக்கு அதே போன்று நடன அசைவுகளை செய்து, ட்ரெட்மில்லரில் ஆடி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


அந்த வீடியோவை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தற்போது அந்த இளைஞரை பாராட்டி எழுதியுள்ளார். அதில்  அவர் "நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!" என்று கூறியுள்ளார்.


Advertisement