சினிமா

நாயை காப்பாற்ற எண்ணி, பரிதாபமாக உயிரிழந்த பிரபல இளம் இயக்குனர்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Summary:

Young director dead in accident

மலையாள சினிமாவில்  ஓர்மயில் ஒரு ஷிஷிரம் படத்தினை இயக்கியவர் விவேக் ஆர்யன். அப்படத்தில் அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் விவேக் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் ஜித்து ஜோசப்பின் மாபெரும்  புகழ்பெற்ற த்ரிஷ்யம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும், மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இயக்குநராகி அடுத்த படத்தை  இயக்குவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தார். இந்நிலையில்  கடந்த 22ம் தேதி தனது மனைவியுடன் அவர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தின் குறுக்கே குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்துள்ளது. அப்பொழுது அவர் வண்டியை வேகமாக திருப்பியபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் கணவன், மனைவி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் விவேக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு மலையாள திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

 


Advertisement