"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
காதல் சுகமானது இளம் நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
தமிழ் சினிமாவில் என்னவளே, காதல் சுகமானது உள்ளிட்ட படங்களில் கதாநாயகர்களுக்கு நண்பனாகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் பிரபல தெலுங்கு நடிகர் வேணு மாதவ்.
மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் தெலுங்கு சினிமாவில் சம்பரதாயம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் வேணு மாதவ் கடந்த மூன்று ஆண்டுகளாகவே கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு தற்போது 39 வயதே ஆகிறது. இந்நிலையில் இந்த இளம் காமெடி நடிகரின் திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதனை தொடர்ந்து அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.