சினிமா

யோகி நீங்க வேற லெவல்... நடிகை ஓவியாவுடன் இணையும் நடிகர் யோகி பாபு.! ஓவியா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Summary:

யோகி நீங்க வேற லெவல்... நடிகை ஓவியாவுடன் இணையும் நடிகர் யோகி பாபு.! ஓவியா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனது காமெடியால் ரசிகர்களை அசர வைத்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. 

யோகிபாபு ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், தனது விடாமுயற்சியாலும், திறமையாலும் காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த யோகிபாபு தற்போது முன்னணி ஹீரோவாகவும் அவதாரமெடுத்துள்ளார். சமீபத்தில் நாயகனாக அவர் நடித்த ‘மண்டேலா’ படம் சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.

இந்தநிலையில் நாளை முதல் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜையும் நடக்கவுள்ளது. இதனை, யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் ஓவியாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பிதழை வெளியிட்டிருக்கிறார். அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்பட்டத்தில், யோகி பாபுவும் ஓவியாவும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


Advertisement