ஓ.. அவரும் இந்த படத்துல நடிக்கிறாரா..? தளபதி 65 படத்தில் இணையும் முன்னணி நடிகர்?

ஓ.. அவரும் இந்த படத்துல நடிக்கிறாரா..? தளபதி 65 படத்தில் இணையும் முன்னணி நடிகர்?


Yogi babu joins Thalapathi 65 movie

தளபதி விஜய்யின் 65 வது படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவாக நடந்துவரும்நிலையில், இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும், விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாவும் இணைத்திருப்பதாக கூறப்படுகிறது.

vijay

ஏற்கனவே மெர்சல், பிகில், சர்கார் ஆகிய படங்களில் யோகி பாபு விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தநிலையில், தற்போது நான்காவது முறையாக அவர் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.