என்ன தான் ஆச்சு யாசிக்காவிற்கு! அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி



yashika released shocking video

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறிவிட்டார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

yashika

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். இவர் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடியபோது தல அஜித்துடன் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்தார். இது ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் தனது பிக் பாஸ் தோழியான ஐஸ்வர்யா தத்தா உடன் யாஷிகா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள யாஷிகா அதிர்ச்சியான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.