அந்த டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை ஆசையாக கேட்ட ரசிகர்! அடுத்த கணமே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை யாஷிகா!

அந்த டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை ஆசையாக கேட்ட ரசிகர்! அடுத்த கணமே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை யாஷிகா!


yashika childhood photo viral

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை யாஷிகா அவ்வப்போது வித்தியாசமான, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

yashika

இந்நிலையில் சமீபத்தில் யாஷிகா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்  லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் சிறு வயது புகைப்படத்தையும், பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படத்தையும் கேட்டுள்ளார். இந்நிலையில் அவர்களுக்காக யாஷிகா தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

yashika