ப்ளீஸ் பிரார்த்தனை செய்யுங்க.. பயங்கர விபத்தில் சிக்கிய யாஷிகாவின் தற்போதைய நிலை என்ன? தங்கை வெளியிட்ட ஷாக் தகவல்!



yashika-anand-sister-shares-about-sister-health-conditi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரத்தில் பார்ட்டில் ஒன்றில் பங்கேற்ற பிறகு தனது காரில் சென்னை திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் நடிகை யாஷிகாவின் கார் அதிவேகமாக கிழக்கு கடற்கரை சாலையில், சூலேறிக்காடு என்ற பகுதியில் வந்தபோது  கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. 

இதில் யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர். மேலும் தோழி வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா  மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது அக்காவின் நிலைகுறித்து நடிகை யாஷிகாவின் தங்கை ஓஷின் ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

yashika

அதில் அவர், யாஷிகா ஆனந்த் நலம் பெற பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. யாஷிகா தற்போது சுயநினைவிற்கு வந்துள்ளார். அவருக்கு ஒரு சர்ஜரி முடிந்து விட்டது. தற்போதும் அவர் ஐசியுவில்தான் உள்ளார். அவரது உடலில் பல எலும்பு முறிவு இருப்பதால் அதற்கான அறுவை சிகிச்சை வரும் தினங்களில் ஒவ்வொன்றாக  நடைபெறவுள்ளது. தயவுசெய்து அவருக்காக பிராத்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.