அடேங்கப்பா... இதுவரையில் கமலின் விக்ரம் படம் படைத்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா.?

அடேங்கப்பா... இதுவரையில் கமலின் விக்ரம் படம் படைத்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா.?


World wide box office collection for Vikram movie

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வசூலை வாரி இறைத்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாஸ் காட்டி வருகிறது.

Box office collection

இந்நிலையில் இந்த வருடம் தமிழகத்தில் வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டிய படமாக கமல்ஹாசனின் விக்ரம் படம் அமைந்துள்ளது.25 நாட்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விக்ரம் படம் இதுவரை மொத்தமாக 415 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.