உலகநாயகனுக்கு திடீரென உடல் நல குறைவு.... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

உலகநாயகனுக்கு திடீரென உடல் நல குறைவு.... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


world-hero-suddenly-fell-illfans-in-shock

உலக நாயகன் என்று கௌரவிக்கப்படும் கமல்ஹாசன் உலகப் புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் தனது அசாத்தியமான நடிப்பால்  உலக மக்களை தன்பால் கவர்ந்துள்ளார். மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் இந்தியாவின் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் திரைப்பட கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகிறார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக கமல்ஹாசனுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது.

Kamal Hassan

தற்போது பிக் பாஸ் சீசன் 6ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்று திரும்பிய கமல்ஹாசன் மிகவும் சோர்வாகவே காணப்பட்டுள்ளார். மேலும் திடீரென உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திர மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு அனுபவிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் கமலஹாசன் டெஸ்ட் ரிப்போர்ட் வந்த பிறகு இன்று மாலை வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.