சினிமா

அட.. இப்படியெல்லாம் செய்துள்ளாரா! சன்டிவி நடிகை ஜெயலட்சுமி மீது பெண் பரபரப்பு புகார்! ஷாக் சம்பவம்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மீது சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

அதில் அவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள சில பெண்களை  இணைத்து மகளிர் குழு நடத்தி வருகிறேன். இந்நிலையில் நடிகை ஜெயலட்சுமி எங்களிடம் வந்து  வங்கியில் லோன் வாங்கி வருவதாக கூறி, 9 பெண்களுக்கு  லோன் பெற்றுத் தந்தார். தாங்களும் மாதம் மாதம் பணம் செலுத்தினோம். தற்போது நாங்கள் கொடுத்த தொகைகளை வட்டி என்றும் அசல் கொடுக்கவில்லை எனவும் கூறுகின்றார். நடிகை  ஜெயலட்சுமி, அனகா என்பவர் மற்றும்  வழக்கறிஞர் சார்லஸ் ஆகியோர் எனது வீட்டிற்குச் வந்து கூண்டோடு அழித்து விடுவோம் என மிரட்டினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அதில் அவர் ஜெயலட்சுமி வங்கியில் கடன் வாங்கித் தராமல் கந்து வட்டிக்கு  வாங்கி கொடுத்ததாக தெரிய வந்துள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement