சினிமா

தனது முதல் சம்பளத்தில் ரஜினிகாந்த் வாங்கிய பொருள் என்ன தெரியுமா?

Summary:

What rajinikanth bought in his first salary

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், இந்திய சினிமாவின் அடையாளம் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட போன்ற திரைப்படங்களில் பிசியாக நடித்துவருகிறார் தலைவர். நடிப்பு ஒருபுறம் இருக்க விரைவில் அரசியலுக்கு வருவதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிட போவதாகவும் அண்மையில் ரஜினி தெரிவித்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அரசியல், நடிப்பு என அனைத்தையும் தாண்டி ஆன்மிகத்தில் மிகவும் ஆர்வமுள்ளவர் தலைவர் ரஜினிகாந்த். முப்பெல்லாம் மீடியா, பேட்டி என அனைத்தையும் விட்டு ஒதுங்கி இருந்த ரஜினிகாந்த் தற்போது மீடியா, பேட்டி என கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவ்வாறு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றியும், தனது முதல் சம்பளத்தில் வாங்கிய பொருள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

அவருக்கு பிடித்தது தனிமையில் கார் ஓட்டுவது. பிடிக்காதது, ஜால்ரா அடிக்கும் நபர்களை. மிகவும் கோபம் கொள்ளக்கூடியவர், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு எனப் பேசி விடுவார். அவருக்கு பிடித்த நடிகர்கள்  கமல், ஸ்ரீபிரியா, சுஜாதா, விஜயகுமார் ஆகியோர். தனிமையில் இருக்க மிகவும் விரும்புபவர், தனது ஆசான் இயக்குனர் இமயம் பாலச்சந்தரை எப்போதும் மறக்க கூடாது என நினைப்பவர்.

அவரது முதல் சம்பளத்தில் வாங்கியது ஒரு சிகரெட் பாக்கெட் மட்டும்தானாம்.  


Advertisement