சினிமா

36 வயசுல எனக்கு எவ்வளோ பிரச்சனை..! மகளிர் தினத்தன்று படம்போட்டு காட்டிய விஜய் டிவி டிடி.. வைரல் வீடியோ..

Summary:

தொகுப்பாளினி டிடி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில்

தொகுப்பாளினி டிடி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. அதில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், இவர் பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். 

2014ல் திவ்யதர்ஷினி தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்தை திருமணம் செய்தார். பின்னர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனவருத்ததால் விவாகரத்து பெற்றனர்.

தற்போது தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருக்கும் டிடி, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் இன்று மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை அப்டேட் செய்துள்ளார். அந்த வீடியோவில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை போட்டுவிட்டு, 36 வயதாகியும் இதுவரை தான் சிங்குளாக இருப்பதாகவும், விவாகரத்து பெற்று இப்போது வரை குழந்தை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் தான் சந்தோசமாக இருப்பாதாக கூறியுள்ளார் டிடி. அதுபோல் எல்லோர் வாழ்க்கைலும் விதவிதமான ப்ராம்லம்ஸ் இருக்கும் இருந்தாலும் சந்தோசமாக இருக்க  வேண்டும் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார் டிடி. இதோ அந்த வீடியோ


Advertisement