வாவ்.. ராதையாக மாறிய டிடி!! வாழ்த்து கூறிய திரைபிரபலங்கள்! வைரல் புகைப்படம்...vj-dd-latest-photo

தொகுப்பாளினி டிடி ராதையாக மாறிய அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. அதில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். 

தற்போது தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருக்கும் டிடி, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் ராதை லுக்கில் போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி திரைபிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம்..