எந்தவித ஆர்பாட்டமும் இன்றி நடந்து முடிந்த விஜே அனன்யாவின் திருமணம்...வைரலாகும் புகைப்படம்.!

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பற்றிய ஆச்சம் நிலவி வருவதால் பல முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் எந்தவித ஆர்பாட்டமும் இன்றி மிகவும் எளிமையாக நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் பல பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் சத்தமின்றி நடைப்பெற்று முடிந்தும், தற்போது நடைப்பெற்று கொண்டு இருக்கின்றன.
சமீபத்தில் கூட பாலிவுட்டின் டாப் நாயகியான கத்ரீனா கைப்பின் திருமணம் எந்தவிதமான ஆடம்பரமும் இன்றி சீக்ரெட்டாக நடைப்பெற்று முடிந்தது. அவர்களே திருமணம் முடிந்ததும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
தற்போது சின்னத்திரை பிரபலமான சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் அனன்யா அவர்களின் திருமணம் முடிந்துள்ளது. அவரது கல்யாண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.