சினிமா

எனக்கு சரக்கு இல்லைன்னா இந்த ஊர்ல யாரும் குடிக்கக் கூடாது..! குடிகாரிபோல் மாறிய VJ அஞ்சனா..! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ.

Summary:

VJ Anjana latest tik tok video goes viral

எனக்கு சரக்கு இல்லைன்னா இந்த ஊர்ல யாரும் குடிக்கக் கூடாது.. மொடாக் குடிகாரி போல் தொகுப்பாளினி அஞ்சனா செய்த டிக் டாக் வீடியோவை அவரது கணவர் வெளியிட்டுள்ளார்.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர்களில் ஒருவர்தான் அஞ்சனா. இவர் கடந்த 2016ல் நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு டிவி நிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கிய இவர் தற்போது மற்றொரு  டிவியில் தொகுப்பாளியாக கலக்கி வருகிறார் அஞ்சனா.

சோசியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி தன் புகைப்படங்களையும் அதில் பதிவேற்றிவருகிறார். இந்நிலையில் பக்காவான குடிகாரைப் போல் கண்களை வைத்துக்கொண்டு எனக்கு சரக்கு கிடைக்கலைன்னா.. இந்த ஊர்ல யாருக்கும் சரக்கு கிடைக்கக் கூடாது..குடிக்கக் கூடாது என டிக் டாக் வீடியோ செய்துள்ளார்.

அந்த வீடியோவை அவரது கணவர் நடிகர் கயல் சந்திரனே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisement