சினிமா

ரொம்ப பயமா இருக்கு.. விஜே அஞ்சனாவிற்கு இப்படியொரு சிக்கலா!! போலீசின் உதவியை நாடிய பிரபலம்!!

Summary:

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே அஞ்சனா. இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அஞ்சனா 2016 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமான கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார். இந்த நிலையில் சில ஆண்டுகள் தனது பணிகளிலிருந்து விலகியிருந்த அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறியுள்ளார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இதற்கிடையில் தற்போது அஞ்சனாவின் கணவர் சந்திரன் +91-96557-12265 என்ற தொலைபேசி நம்பரில் இருந்தும், இன்ஸ்டாகிராமிலும் தனது மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து அஞ்சனா தனது டுவிட்டர் பக்கத்தில், இதுபோன்று கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவந்தேன். நான் அவதூறாக பேசும் எத்தனையோ நபர்களின் எண்களை தொடர்ந்து பிளாக் செய்துள்ளேன். ஆனால், இந்தமுறை இது என்னை மிகவும் பயமுறித்தியுள்ளது என மனஉளைச்சலுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement