சினிமா

மக்களின் விருப்பத்தையும் தெரிஞ்சுக்கனும்! 800 படத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல முன்னணி நடிகர் அட்வைஸ்!

Summary:

800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து நடிகர் விவேக் கருத்துக் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800ல் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இந்நிலையில் முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவானவர். எனவே இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்தவித அரசியலும் கிடையாது. 
இந்த படம் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை கடந்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். இதில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது என படக்குழு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது. 

 இந்நிலையில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விவேக்கிடம், 800 படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து  செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது, உங்களுடைய பார்வை தான் என்னுடைய பார்வை. என்னிடம் கருத்து கேட்கும் அளவுக்கு நான் பெரிய மனிதன் கிடையாது. இருந்தாலும் மக்களால் விரும்பப்படுபவர், மக்கள் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement