சினிமா

மரண மாஸ் காட்டும் தல அஜித். விசுவாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!

Summary:

Viswasam second look poster released

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்கள்  அஜித்  மற்றும் சிவா. விஸ்வாசம் படம் மூலம் இவர்கள் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்கள். கடந்த மூன்று படங்களும் கலவையான வெற்றியற்ற நிலையில் விசுவாசம் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பிரபலமானது. அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று விசுவாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை சதோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரட்டை வேடத்தில் மாஸ் காட்டிய தல அஜித் செகண்ட் லுக் போஸ்டரில் இளமை தோற்றத்தில் கெத்தனா லுக்கில் உள்ளார். இத்தனை நாட்கள் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த செகண்ட் லுக் போஸ்டர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.Advertisement