சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணம்! எப்போ பார்த்தீர்களா! தீயாய் பரவும் திருமண அழைப்பிதழ்!!

Summary:

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து ஏராளமான திரைப

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் ரஜினிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன்  பல நடிகைகளை இணைத்து ஏராளமான கிசுகிசுக்கள் வெளிவந்தன. இந்த நிலையில் அவர் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். மேலும் இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியானது.

மேலும் அண்மையில் பேட்டி ஒன்றில் விஷ்ணு  விஷால் தனக்கும் ஜுவாலா கட்டாவிற்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது திருமண அழைப்பிதழை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இருவருக்கும் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement