#Breaking: "வருவேன் ஆனா வரமாட்டேன்" - ரஜினி ஸ்டைலில் குழப்பிய விஷால்; கட்சி விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

#Breaking: "வருவேன் ஆனா வரமாட்டேன்" - ரஜினி ஸ்டைலில் குழப்பிய விஷால்; கட்சி விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



vishal-started-new-party

 

2024 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பேச்சு வார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் பல புதிய கட்சிகளும் உதயமாகி உள்ளன. 

அந்த வகையில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு மிகுந்த போட்டியை ஏற்படுத்தும் வகையில், நடிகர் விஜயும் புதிய அரசியல் இயக்கத்தை தோற்றுவித்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம் காண உள்ளார். 

Latest news

மேலும் நடிகர் விஷால் தனது நற்பணி மன்றம் மூலமாக பல சமூக நல பணிகளை செய்து வந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு 2026 தேர்தலில் களமிறங்கும் பொருட்டு தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார் என பல வியூகங்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "நான் அரசியல் ஆதாயத்தினை எதிர்பார்த்து மக்களுக்கான பணிகளை செய்தது இல்லை. என் மக்கள் நல இயக்கத்தின் வாயிலாக, என்னால் இயன்ற உதவியை செய்கிறேன், அதனை தொடருவேன். ஒருவேளை எதிர்காலத்தில் இயற்கை வேறு முடிவு எடுக்க என்னை தூண்டினால், அப்போது மக்களுக்காக அரசியலில் இறங்கி குரல் கொடுக்கவும் தயங்கமாட்டேன்" என கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட கால இழுத்தடிப்புக்கு பின்னர் அரசியலில் இருந்து பின்வாங்குவது குறித்து அறிவித்து இருந்தார். அதேபோல நடிகர் விஷால் மழுப்பலாக பேசி இருக்கிறார்.

இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: