சினிமா

இவர்தான் விஷால் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணா? புகைப்படம்!

Summary:

Vishal lover photo goes viral on internet

விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியும், விஷாலும் நீண்ட வருடங்களாக காதலிப்பதாகவும், பின்னர் ஒருசில சண்டையால் பிரிந்த இவர்கள் பின்னர் மீண்டும் ராசியாகிவிட்டதாகவம் செய்திகள் வந்தது.

பின்னர் விஷால், வரலட்சுமி இருவரும் மீண்டும் காதலிப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் அயோக்யா படப்பிடிப்பில் இருந்த விஷாலிடம் இதுகுறித்து கேட்டபோது எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்பது உண்மைதான். இது காதல் திருமணம். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது உண்மையில்லை என்று கூறினார்.

தற்போது விஷால் திருமணம் செய்துகொள்ள போகும் பெண் இவர்தான் என புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் உண்மையான பெண்ணா என்று அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதோ அந்த புகைப்படம்.


Advertisement