அரசியலுக்கு அடித்தளமா இது.. நடிகர் விஷாலின் அதிரடி திட்டத்தால் குவியும் வாழ்த்துக்கள் .!

தமிழ்நாட்டில் கடன் தொல்லை, விளைச்சலின்மை போன்ற பல காரணங்களால் நாளுக்கு நாள் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால்தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு உதவி செய்ய புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
அதன் படி அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்களில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்ற பின் வெளியான திரைப்படங்கள் இரும்புத்திரை மற்றும் துப்பறிவாளன். இந்த திரைப்படங்களில் விற்பனையான டிக்கெட்டுகளில் இருந்து ரூ.11 இலட்சம் வசூலானது.
இந்நிலையில் 25 திரைப்படங்கள் வெற்றிகரமாக நடித்துள்ளதை கொண்டாடும் வகையிலும, வசூலான தொகையை விவசாயிகளுக்கு வழங்கவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் நடிகர் விஷால் ரூ.11 இலட்சத்தையும், வேட்டி மற்றும் சேலைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாய பெரு மக்கள் அனைவரும் நடிகர் விஷாலுக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் விஷாலுக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாகவும் ,அதற்கான அடித்தளமே இந்த விழா எனவும் செய்திகள் வெளியாகியுளளது.
அரசியலுக்கு அடித்தளமா இது.. நடிகர் விஷாலின் செயலால் ஷாக் ஆன ரசிகர்கள்.!