நடிகர் விஷாலின் அப்பாவா இது! 82 வயதில் மகனுக்கே டஃப் கொடுப்பார் போல..புகைப்படங்களை கண்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்!vishal-father-exercise-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவரது தந்தை ஜி.கே ரெட்டி. இவர் ஜி.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.மேலும் தனது மகன் விஷால் கதாநாயகனாக நடித்த சண்டக்கோழி, திமிரு, தோரணை உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி இருவரும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று பின்னர் மீண்டுள்ளனர். 

அதனைத்தொடர்ந்து ஜிகே ரெட்டி யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். மேலும் அதில்  தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு  வருகிறார். அதுமட்டுமின்றி எளிமையாக உடற்பயிற்சி செய்வது குறித்து சொல்லியும் கொடுக்கிறார். 

இவ்வாறு 82 வயதில் கடுமையான உடற்பயிற்சியால், தனது உடலை கட்டுமஸ்தாக வைத்து தனது மகன் விசாலுக்கே டஃப்  கொடுக்கும் ஜி.கே ரெட்டியின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.