சினிமா

முடிந்தது விஷாலின் நிச்சயதார்த்தம்! திருமணம் எப்போது?

Summary:

Vishal engagement photos

ஹைதராபாத்தில் நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் விஷால்-அனிஷா ஜோடி நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

நடிகர் விஷால் அனிஷா ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இரு வீட்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இந்த நிச்சயதார்த்த விழாவில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று பங்கேற்றனர். குறிப்பாக குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி, நந்தா, ரமணா ஸ்ரீமன் மற்றும் பசுபதி உள்ளிட்டோர் இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றர். இந்த விழா முடிந்தவுடன் இன்று மாலை விஷால் பார்ட்டி வைக்கிறாராம். 

விஷால் திருமணம் குறித்து கூடுதல் தகவல் இன்று மாலை வெளியாகவுள்ளது. 


Advertisement