சினிமா

ஆத்தாடி.. என்னா அடி! படப்பிடிப்பில் பயங்கரமாக அடி வாங்கிய நடிகர் விஷால்! தீயாய் பரவும் ஷாக் வீடியோ!!

Summary:

<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-perma

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் அடுத்ததாக து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். அவர் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும்படத்தை இயக்கி அதற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இது விஷாலின் 31வது திரைப்படமாகும்.

இப்படத்தில் ஹீரோயினாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாவட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் விஷால் 31 படக்குழுவினர் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளனர்.

அங்கு சண்டைக்காட்சிகளுடன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக ஜூலைக்குள்  படப்பிடிப்பை  முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் ரவுடிகளிடம் பயங்கரமாக அடிவாங்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் வைரலாகி வருகிறது.


Advertisement