செல்ல மகளுக்கு பெயர் வச்சாச்சு! முதன் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா! செம கியூட்ல!

செல்ல மகளுக்கு பெயர் வச்சாச்சு! முதன் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா சர்மா! செம கியூட்ல!


virat koli anushka sharma daughter name is vamika

இன்று தங்களுடைய செல்ல மகளுக்கு பெயர் வைத்துள்ள விராட் கோலி மற்றும்  அனுஷ்கா சர்மா ஜோடி, முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்துடன் குடும்பமாக இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் பிரபல பாலிவுட்  நடிகையான அனுஷ்கா ஷர்மா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில்  கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இருவருக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டநிலையில் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் விராட்கோலி தெரிவித்திருந்தார். 

அதனை தொடர்ந்து அந்த தம்பதியினருக்கு கடந்த மாதம் 11-ந் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து தன்னுடைய மனைவியும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும், தங்களுடைய வாழ்க்கையில் புதிய பயணம் தொடங்கவிருப்பதையும் விராட் கோலி மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அக்குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா சர்மா குழந்தையை தனது கையில் வைத்திருக்க, தனது மகளை கோலி மகிழ்ச்சியுடன் பார்ப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.